ஆகாஷ் உடற்கூராய்வு அறிக்கையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள்!
Autopsy Confirms Custodial Torture in Akash Case 28 Injuries and Brain Hemorrhage Revealed
சாத்தான்குளம் வடுவே இன்னும் ஆறாத நிலையில், மானாமதுரை இளைஞர் ஆகாஷின் மரணம் தமிழகக் காவல்துறையின் மீதான நம்பகத்தன்மையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது. திமுக ஆட்சியில் இதுவரை 37 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டும் வேளையில், இந்த வழக்கு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
காவல்துறையின் 'கதை' vs நிதர்சனம்:
ஆகாஷ் தப்ப முயன்றபோது கீழே விழுந்து கால் முறிந்ததாகவும், பின்னர் மூச்சுத்திணறலால் உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியது. ஆனால், "போலீசாரே என் காலை உடைத்தனர்" என ஆகாஷ் தனது ரிமாண்ட் வாக்குமூலத்தில் குறிப்பிட்டது ஆரம்பத்திலேயே காவல்துறையின் வாதத்தைச் சிதைத்தது.
உடற்கூராய்வு அறிக்கை - பகீர் உண்மைகள்:
தற்போது வெளியாகியுள்ள பிரேதப் பரிசோதனை அறிக்கை, இது ஒரு திட்டமிட்ட லாக்-அப் வன்முறை என்பதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது:
28 காயங்கள்: ஆகாஷின் உடல் முழுவதும் மொத்தம் 28 இடங்களில் காயங்கள் இருந்தன. எலும்பு முறிவு: வலது காலின் நடுப்பகுதியில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மூளையில் ரத்தக்கசிவு: மிக முக்கியமாக, அவரது மூளையில் ரத்தக்கசிவு (Brain Hemorrhage) இருந்ததாக அறிக்கை கூறுகிறது.
:காலில் அடிபட்டவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறிய காவல்துறையின் விளக்கம், மூளைக் கசிவு மற்றும் 28 காயங்கள் குறித்த செய்திகளை மறைத்திருப்பது அம்பலமாகியுள்ளது. காவல்துறையின் இந்தத் தொடர் அத்துமீறல்கள் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Autopsy Confirms Custodial Torture in Akash Case 28 Injuries and Brain Hemorrhage Revealed