தமிழக - கர்நாடக எல்லை பகுதிகள் உஷார்.. விரைவில் அமலாகும் உத்தரவு?..! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இரண்டாம் கொரோனா பரவல் அலை அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரமாகவே மெல்ல உயர தொடங்கிய தமிழக கொரோனா பாதிப்பு, மீண்டும் உச்சகட்டத்தை எட்டிவருகிறது.

இதனால் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்துள்ளது. மருத்துவமனைகளில் மீண்டும் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கடந்த 8 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.  

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக மூத்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.

இவர்களிடம் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு அதிகரிப்பு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துதல், தடுப்பூசி செலுத்துதல், பனிரெண்டாம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தெரியவருகிறது. இதனால் தமிழகத்தில் விரைவில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைப்போன்று, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவையிலும் கட்டுப்பாடுகள் அல்லது தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேரள மாநிலத்திற்கு தமிழகத்திற்கு இருந்து பேருந்துகள் செல்லாத நிலையில், கர்நாடம், ஆந்திரா, புதுச்சேரி செல்ல தடை ஏதும் இல்லை. 

கர்நாடகாவிலும் கொரோனா அதிகரித்து வருவதால், அங்கு ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு விதிப்பிட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கோடு விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பகுதியிலும் தமிழக காவல்துறையினர் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, சாலைத்தடுப்புகள் அனைத்தும் முன்னதாகவே தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attibele Tamilnadu Check Post Alert and Ready to Get Lockdown Announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->