பயணிகள் கவனத்திற்கு.. இரண்டு நாட்கள் 24 மின்சார ரெயில்கள் ரத்து!
Attention passengers 24 electric trains are canceled for two days
சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு , சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில், இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் ஜூலை 10-ஆம் தேதி, காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
ரத்து செய்யப்படும் முக்கிய ரெயில்கள்:
🔹 சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு:
காலை: 8.05, 9.00, 9.30, 10.30, 11.35
🔹 கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்ட்ரலுக்கு:
காலை: 9.10, 9.55, 11.25, 12.00, 1.00, 2.30
🔹 சென்ட்ரல் ⇌ சூலூர்பேட்டை:
சென்ட்ரலிலிருந்து: 5.40, 8.35, 10.15, 12.10
சூலூர்பேட்டையில் இருந்து: 10.00, 11.45, 12.35, 1.15
🔹 கடற்கரை ⇌ கும்மிடிப்பூண்டி:
கடற்கரையிலிருந்து: 9.40, 12.40
கும்மிடிப்பூண்டியிலிருந்து: 10.55
🔹 சூலூர்பேட்டை ⇌ நெல்லூர் (பயணிகள் ரெயில்):
சூலூர்பேட்டையிலிருந்து காலை 7.50
நெல்லூரிலிருந்து இரவு 9.00
🔹 பகுதி நேர ரத்து:
செங்கல்பட்டிலிருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்: கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே ரத்து
கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3.00 மணிக்கு தாம்பரம் செல்லும் ரெயில்: கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே ரத்து
இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள்:
சென்ட்ரல் ⇌ பொன்னேரி:
சென்ட்ரலிலிருந்து: காலை 8.05, 9.00, 9.30
பொன்னேரியிலிருந்து: காலை 9.40, 9.58
சென்ட்ரல் ⇌ எண்ணூர்:
சென்ட்ரலிலிருந்து: 10.30, 11.35
எண்ணூரிலிருந்து: 11.03
கடற்கரை ⇌ மீஞ்சூர்:
கடற்கரையிலிருந்து: 9.40, 12.40
மீஞ்சூரிலிருந்து: 10.34, 12.24, 1.32
பொன்னேரி ⇌ கடற்கரை:
காலை 10.28 மணிக்கு
பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க தெற்கு ரெயில்வே கேட்டுக்கொண்டு இருக்கிறது.
English Summary
Attention passengers 24 electric trains are canceled for two days