"நாங்க படியில தான் நிப்போம்" சின்னசேலத்தில் அராஜகம்!! தட்டி கேட்ட கண்டரக்டருக்கு அடி, உதை!! பஸ்ஸிற்கு நேரத்தை பரிதாபம்!!  - Seithipunal
Seithipunal


நேற்று இரவு சின்னசேலத்திற்கு சேலம் ஆத்தூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 30-க்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். 

ஆத்தூர் அருகே உள்ள பெரியேரியைச் சேர்ந்த ரமேஷ் (28) என்பவர் இந்த பேருந்தில் கண்டக்டராக பணியாற்றிக்கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து சின்னசேலம் கூட்டுரோடு என்ற இடத்தில் பேருந்து வந்து நின்றுள்ளது.

அப்போது, வானக்கோட்டையை சேர்ந்த தேவேந்திரன் (வயது 32), காந்திநகரை சேர்ந்த முருகன் (வயது 32), செல்வராஜ் (வயது 50)  ஆகியோர் அந்த பேருந்தில் எறியுள்ளனர். அவர்கள் 3பேரும் பேருந்தின் உள்ளே செல்லாமல் படிகட்டில் நின்றவாறு பயணம் செய்துகொண்டுள்ளனர். 

அப்போது பேருந்தின் கண்டக்டர் ரமேஷ் படிக்கட்டில் நிற்கிறீர்கள் ஏன்? என கேட்டுள்ளார். நாங்கள் அப்படிதான் நிற்போம் என கூறி கண்டக்டர் ரமேஷிடம் தகராறு செய்துள்ளனர். 

இந்நிலையில், சின்னசேலத்தில் இரவு 10 மணியளவில் அந்த பேருந்து நின்றுள்ளது. அவர்கள் மூவரும், கீழே இறங்கினர். பின்னர் ரமேஷிடம் தகராறு செய்து அவரைஅங்கேயே சரமாரியாக தாக்கி அடித்து உதைத்துள்ளனர். மேலும், அவருக்கு கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.

மேலும், அங்கு கீழே கிடந்த கற்களை எடுத்து பேருந்தின் மீது வீசியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கிவிட்டது. உடனே அங்கிருந்து மூவரும் தப்பி ஓடியுள்ளனர். ரமேஷ் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் மூவரையும் மடக்கி பிடித்த போலீசார் கைது செய்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

attacking bus conductor in chinnaselam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->