ஜல்லிக்கட்டு போட்டி இப்படி நடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


அனுமதியில்லாமல் ஜல்லிக்கட்டு நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் அனுமதி பெற்று நடைபெற்று வருகிறது.

கால்நடை வளர்ப்போர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு அரசு கால்நடைமருத்துவர் மூலமாக மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் முற்றிலும் நாட்டின காளைகளாக இருக்க வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதை மீறுபவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டின காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். 

கலப்பின மற்றும் உயர் ரக காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது. எனவே, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் காளை வளர்ப்போர்கள், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு நாட்டினம் என்பதற்கான தனிச்சான்றிதழை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் பெற வேண்டும். 

இதற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி அரசு கால்நடை மருத்துவர் மூலம் சான்றிதழ் பெற்ற பின்னரே ஜல்லிக்கட்டு போட்டியில் இனி வருங்காலங்களில் பங்கு பெற முடியும்" என்று அந்த செய்தி குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ARIYALURE JALLIKATTU RULE


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal