சூடுபிடிக்கும் பாமகவின் திண்ணை பிரச்சாரம்.. பரபரக்கும் அரசியல்களம்..! - Seithipunal
Seithipunal


ஆண்டிமடம் ஒன்றியம் மருதூர் ஊராட்சியில், கீழப்பட்டி மற்றும் தெற்குப்பட்டி ஆகிய கிராமங்களில் வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி சார்பாக திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை கிராமங்கள் தோறும் கொண்டாடும் விதமாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் திண்ணை பிரச்சாரம் மற்றும் இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் பாட்டாளி மக்கள் கட்சியினர் பல்வேறு விதங்களில் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக திண்ணைப் பிரச்சாரம், கிராம அளவிலான கூட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் தங்களின் மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸின் அறிவுறுத்தலின் பேரில் திண்ணைப் பிரச்சாரத்தை ஆரம்பித்த வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் மருதூர் ஊராட்சியில், கீழப்பட்டி மற்றும் தெற்குப்பட்டி ஆகிய கிராமங்களில், வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்த பாமகவிற்கு ஆதரவு திரட்டி வன்னியர் சங்க மாநில செயலாளர் க.வைத்தி திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur Vanniyar Sangam K Vaithi Shrine campaign


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->