விபத்தை தடுக்க புதிய முயற்சியில் களமிறங்கி, அசத்தும் அரியலூர் போலீஸ்..! - Seithipunal
Seithipunal


நாட்டில், மக்கள் தொகையோடு சேர்ந்து சாலையில் செல்லும் வாகனங்களும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து கொண்டிருக்கிறது.

அதிலும் பெருமளவிலான விபத்துக்கள் இரவு நேரங்களில் தான் நடக்கிறது. இரவில் வண்டி ஓட்டுவதினால் ஏற்படும் களைப்பு மற்றும் தூக்க கலக்கத்தில் வண்டி ஓட்டுவதாலும் விபத்து நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இதனை தடுக்க முடிவதில்லை. 

ariyalur police, seithipunal

இவ்வாறாக நடக்கும் விபத்துகக்ளை தடுக்கும் முயற்சியில் அரியலூர் மாவட்டம் ஜெயம்கொண்டான் டி.எஸ்.பி மோகன்தாஸ் தலைமையில் காவல் துறையினர் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்கள்.

அதில் காவலர்கள் இரவு நேரங்களில் லாரி போன்ற வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு விபத்து குறித்து எடுத்துரைக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல், அவர்களை முகம் கழுவச் சொல்லி தேநீர் வழங்கி வருகிறார்கள் .

அதன் பின், அவர்களைச் சிறிது நேரம் களைப்பாறச் செய்து, பின்னர் வாகனங்களை ஓட்டிச் செல்ல அனுமதித்தார்கள். காவலர்களின் இந்த புதிய முயற்சி வாகன ஓட்டிகளிடையேயும் பொது மக்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur police officer awareness for night drivers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->