இதன் காரணமாக தான் தி.மு.க கூட்டணியில் கமல் இணைத்துள்ளார்..! அண்ணாமலை வருத்தம்! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை செல்வதற்காக விமான நிலையம் சென்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியிருப்பதாவது, தமிழகத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை தொடங்கிய கமலஹாசன் தற்போது தி.மு.கவில் இணைந்துள்ளார். 

கமலஹாசனுக்கு இருக்கக்கூடிய நிர்பந்தம் காரணமாக மீண்டும் தி.மு.கவில் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது முன்னதாகவே நடந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தான் நடந்துள்ளது. 

கமலஹாசன் தி.மு.கவின் நிலைப்பாட்டில் தான் செல்ல வேண்டும் என்பது கவலையாக உள்ளது. ஜாபர் கைது வழக்கில் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என கண்டுபிடித்து என்.சி.பி. அதிகாரிகள் தமிழக மக்கள் முன்னால் நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai speech viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->