அண்ணா பல்கலைகழக பேராசிரியர்கள் திடீர் போராட்டம்.!! - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக பேராசிரியர் கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாக பிரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆன்லைன் வகுப்புகள் எதுவும் புறக்கணிக்காமல் ஜனநாயக ரீதியில் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் உலகளவில் பல முன்னணி பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தங்கள் போட்டு பல ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. 

இரண்டாக பிரித்தால் இந்த ஆய்வுகள் எல்லாம் கேள்விக்குறியாகும். ஆராய்ச்சி மேம்படுத்த புதிய ஏற்பாடு என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் நாங்கள் ஏற்கனவே ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறோம். இரண்டாக பிரித்தால் புதிய கல்வி நிறுவனம் எப்படி தொடங்கி வளரர வேண்டுமோ அது போன்ற  சிக்கலான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஏற்படுத்தியுள்ள அடித் தளத்தை பயன்படுத்த முடியாமல் போய்விடும் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anna university professors protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->