தமிழ்நாட்டில் "PM SHRI" மூலம் NEP அமலுக்கு வருகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகம் முழுவதும் வரும் கல்வி ஆண்டு முதல் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு விருப்பம் தெரிவித்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்து வரும் சூழலில் புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்தில் இருப்பது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் "நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது.

மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம்" என‌ விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbil Mahesh clarify TNGovt opposed new education policy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->