இரட்டைமலை சீனிவாசன் 76 ஆம் ஆண்டு நினைவேந்தல் - நா.த.க., அ.ம.மு.க சார்பில் மரியாதை.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி சீமான் : 

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது, " சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவைப்போற்றும் நிகழ்வு நடைபெற்றது. 

மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தாத்தாவின் திருவுருவப் படத்திற்கு முன்னால், சீமான் அவர்கள், நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தினார். உடன், நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க டிடிவி தினகரன் :  

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் ட்விட்டர் பதிவில், "  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவரும், அவர்களுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்தவருமான திரு. ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் இன்று. ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்! " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK TTV Dhinakaran NTK Seeman Memorial about Rettamalai Srinivasan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->