கொரோனா காலத்திலும் கோலாகலம்! முதல்வர் பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்க தயாராகும் தினகரன்?!  - Seithipunal
Seithipunal


மன்னர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி அரசியல் கட்சிகள் அவரது சிலைக்கு மரியாதையை செய்து வருகிறார்கள். அதிமுகவின் பலமாக இருக்கும் கொங்கு நாட்டை சேர்ந்தவர் தீரன் சின்னமலை. முதலமைச்சர் பழனிச்சாமியும் அதே சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொங்கு நாட்டில் தனக்கும் பலம் இருக்கு என காட்டும் விதமாக தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பில் இரண்டு இடங்களில் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொங்கு மக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தயராகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையானது, " இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈந்த பெருமகன், ஆங்கிலேயரை வீரத்துடன் எதிர்த்த மன்னர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருஉருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான  திரு.G.செந்தமிழன்,  கழக கொள்கைப்பரப்பு செயலாளர் செல்வி.C.R.சரஸ்வதி, கழக அமைப்பு செயலாளர் திருவான்மியூர் திரு.S.முருகன், வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.P.சந்தானகிருஷ்ணன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.V.சுகுமார்பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

இதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு கழக நெசவாளர் அணி செயலாளர் திரு.A.ஷண்முகம், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.G.தங்கராஜ், ஈரோடு மாநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சக்தி (எ)சிவஷண்முகம், ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு.S.R.செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK Respect theeran Chinnamalai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->