பொதுமக்கள், நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து.. போராட்டதை ஒத்தி வைத்தார் டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிரான போராட்டம் நடத்த கொரோனா பரவல் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழகத்தின் உயிர் நதியான காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கழகத்தின் சார்பில் தஞ்சாவூரில் வரும் 06.08.2021 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறவிருந்த இப்போராட்டத்திற்கு கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிற காரணத்தைக் கூறி காவல்துறையினர் இன்று அனுமதி மறுத்துள்ளனர்.

கொரோனா பரவல் விகிதம் பெருமளவு குறைந்து வந்த நிலையில், ஜூலை 31-ம் தேதிக்கு பிறகு இயல்பு நிலை உருவாகும் சூழல் இருந்ததால், கழகத்தின் சார்பில் இப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பதைக் காரணம் காட்டி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார நிறுவனம், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் புதிய எச்சரிக்கைகளை பொறுப்புள்ள அரசியல் கட்சியாக கருத்தில்கொண்டும், கழக உடன்பிறப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதியும், இப்போராட்டத்தால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவிடக் கூடாது என்ற அக்கறையோடும் ஆகஸ்ட் 6-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தைத் தள்ளி வைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. மேகேதாட்டு அணையை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்துவதற்கான போராட்டக் களத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உறுதியாக நிற்பதோடு, விரைவில் கொரோனா தாக்கம் குறைந்தவுடன் மீண்டும் இதே போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMMK Post Pend Protest at Thanjavur Megadatu Dam Issue due to Corona issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->