அம்மா ஓட்டலில் இனி புது ரெசிபி..! கொண்டாட்டத்தில் சென்னை மக்கள்.!  - Seithipunal
Seithipunal


நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்களை தமிழக அரசு மேம்படுத்தி லாபகரமானதாக மாற்ற திட்டமிட்டு இருக்கின்றது, 

மறைந்த முதல்வரான ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருந்த பொழுது ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் உணவு சாப்பிட தமிழக அரசினால் அம்மா உணவகம் என்ற திட்டத்தை ஏற்படுத்தினார். முதலில், இந்த உணவகம் சென்னையில் மட்டுமே இருந்தது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் திட்டமானது விரிவுபடுத்தப்பட்டது.

சமீபகாலமாக இந்த அம்மா உணவகம் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த உணவகங்களில் கடந்த ஆறு ஆண்டுகளில் 600 கோடிகளுக்கு மேல் செலவு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், அதிலிருந்து அரசுக்கு வெறும் 184 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் சென்னையில் மட்டுமே 407 உணவகங்கள் இருக்கின்றன.

இவற்றை, மேம்படுத்தி லாபகரமானதாக மாற்றி அமைக்க நிதி தேவைப்படுவதால் இதனைத் சென்னை மாநகராட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி, ஒரு அறக்கட்டளையை நிறுவி நிதி சேகரிக்கும் பணியில், சென்னை மாநகராட்சி ஈடுபட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உணவகங்களுக்கு தனித்தனியே சமையல் செய்யாமல் ஒரே இடத்தில் சமைத்து அனுப்பி வைக்கவும், டீ, காபி, பால் போன்ற பானங்கள் வழங்கவும் உணவகங்களில் விளம்பர பலகை வைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கின்றதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amma Hotel new recipe in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->