அஜித்குமார் கொலை வழக்கு - நிகிதா, சிபிஐ விசாரணைக்கு ஆஜர்!
Ajithkumar murder case Nikitha present for CBI inquiry
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா முதல்முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27-ம் தேதி திருப்புவனம் தனிப்படை போலீசார் அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு டெல்லியைச் சேர்ந்த சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். இதையடுத்து அஜித்குமாருடன் விசாரணைக்கென அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் ,கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் , அவரது நண்பர்கள் அஜித்குமாரின் தம்பி மற்றும் தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேரிடமும் சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில், திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா முதல்முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
English Summary
Ajithkumar murder case Nikitha present for CBI inquiry