நகரமே ஸ்தம்பித்து நின்ற சம்பவம்.. நீலகிரி கூடலூரில் வாகன ஓட்டிகள் அவதி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் கூடலூரில் வார விடுமுறையை முன்னிட்டு நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல்  சிக்கி நின்றன. இந்த போக்குவரத்தை சரி செய்ய போக்குவரத்து காவலர்களும் பெரிதும் அவதிக்கு உள்ளாயினர்.

கர்நாடகா மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் நீலகிரி மாவட்டம் மற்றும் உதகமண்டலத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கூடலூர் வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இந்நிலையில் கோடை விடுமுறை என்பதால் நீலகிரி மற்றும் உதகமண்டலத்தில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து இருக்கின்றனர்.

ரம்ஜான் பண்டிகை மற்றும் வாரம் விடுமுறையை முன்னிட்டு பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் உதகமண்டலத்திற்கு வருகை புரிந்திருந்தனர். இங்கு வருகை புரிந்த அனைத்து சுற்றுலா பயணிகளும் நேற்று மாலை  கூடலூர் வழியாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்.

அப்போது கூடலூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கிய வாகனங்கள் முன்பின் நகர முடியாமல் தவித்தன. சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நகர முடியாமல் சிக்கித் தவித்தது. இதனை சரி செய்வதற்கு போக்குவரத்து காவலர்களும் மிகவும் சிரமப்பட்டனர். இதனால் கூடலூர் சாலையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ahead of the summer holidays heavy traffic in Nilgiri district Gudalur left vehicles stranded for seven kilometers


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->