வேளாண் பட்ஜெட் 2023: அனைத்து கிராம வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில், 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தை ஏப்ரல் 21-ந்தேதி வரை நடத்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டது.

இதன்படி, வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார். விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள், பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Agriculture Budget 2023 Rs 230 crore for all rural development schemes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->