அதிமுகவில் ஓபிஎஸ்-க்கு மீண்டும் இடம்? எடப்பாடி பழனிசசாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்று, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில், உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாவது, "அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு என நேற்று தகவல் வந்ததும், எனக்கு இரவு தூக்கமே வரவில்லை; தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற ஐயம் இருந்தது.

ஆர்.பி.உதயகுமார் இங்கு எழுப்பியுள்ள அம்மா கோயிலில் இன்று மாலை அணிவித்து, நல்ல தீர்ப்பு வர வேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

அங்கு இரு தலைவர்களும் அருள் கொடுத்தார்கள்; அடுத்த சில நிமிடத்திலேயே நல்ல செய்தி வந்துள்ளது.

இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி போய்விட்டார்; இரட்டை இலை சின்னம் குறித்து பேச அவருக்கு தகுதி இல்லை.

ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். 

ஓபிஎஸ்-க்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒருசிலரை தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் வரவேற்போம்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Head EPS SAy about SC Judgement 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->