அனல் பறக்கும் அரசியல் களம்... மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!   - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். 

விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்து முக்கிய பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு தற்போது ஆலோசனையில் விஜய் ஈடுபட்டுள்ளார். 

விஜய் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் தேர்தலில் நேரடியாக போட்டியிடலாமா அல்லது ஆதரவை தெரிவிக்கலாமா என ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விஜய் அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் அரசியல் நகர்வுகள் குறித்த இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

நாடாளுமன்றத் தேர்தல் குறித்\தும் பேசலாம் என கூறப்படும் நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளனர் குறிப்பிடத்தக்கது. 

குறிப்பாக 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதன் பிறகு சினிமா துறையில் விஜயின் திரைப்படங்களால் சிக்கல் ஏற்பட்டது. 

பின்னர் அனிதாவின் மரணத்தின் போது நேரில் சென்று விஜய், தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனை மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பிரச்சனை போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார். 

பள்ளி மாணவர்களுக்கு தேவையான உதவி தொகைகள் வழங்குவது போன்ற அரசியல் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் விஜய் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

 Actor Vijay suddenly consults district leaders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->