விஜய்யின் கட்சிக் கொடி என்ன? - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். விஜயின் இந்த திடீர் அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விஜய், கட்சியின் கொடியை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதாவது கொடியின் நிறம் மற்றும் கொள்கைகளை விளக்கும் வகையில் கொடி வடிவமைக்கப்படுகிறது. 

கட்சியின் சின்னம் அமைப்பது பற்றி கட்சி தலைவர் விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனையில், கட்சி சின்னம் பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் வடிவமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, தேர்தல் கமிஷனுக்கு ஐந்து சின்னம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்து பெண்களை கவரும் வகையில் கட்சி சின்னம் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay send political party flag to election commission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->