வெளியானது விஜயின் கட்சி பெயர்.! என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், விஜய் மக்கள் இயக்கமும் உள்ளது. இந்த இயக்கம், கடந்த சில ஆண்டுகளாகவே சமூக சேவை செய்து வருகிறது. அத்துடன், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரத்த தான மையம், விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக், விஜய் நூலகம் உள்ளிட்டவையும் இயங்கி வருகிறது.

நடிகர் விஜய் இந்த இயக்கத்தின் மூலமாக கடந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றை செய்தது.

இவையனைத்தும் அரசியலுக்கு அடித்தளமாக கருதப்பட்ட நிலையில், சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்த விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், பிப்ரவரி மாதம் புஸ்ஸி ஆனந்த் உட்பட விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் டெல்லி சென்று விஜய் மக்கள் இயக்கத்தை அதிகாரபூர்வமாக அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வந்துள்ள தகவலின் படி நடிகர் விஜய்யின் புதிய கட்சிக்கு ’தமிழக முன்னேற்ற கழகம்’ என்று பெயர் வைக்க உள்ளதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் கட்சியின் பெயர், கட்சியின் கொடி உள்ளிட்ட முழு விவரங்கள் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay political party name released


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->