விஜய்க்கு ஷாக் கொடுத்த திருச்சி ரசிகர்கள்.. அரசியல் வட்டாரத்தில் அடுத்த பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் நேரடியாக சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பில், அரசியல் களத்தில் இறங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும், நிர்வாகிகள் அரசியலுக்கு அழைப்பு விடுத்ததாகவும், இதற்கு விஜய் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. 

மேலும், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இந்த சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் நாம் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இந்த விஷயம் குறித்து அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கையில், ஒருவேளை விஜய் அரசியலில் களமிறங்கும் பட்சத்தில், ரஜினிக்கும் - கமலுக்கும் மிக போட்டியாக அமையும் என்று தெரிவிக்கின்றனர். 

இதுமட்டுமல்லாது விஜய் அரசியலுக்கு வருவதை தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதற்கான காரணமாக பாஜக இருக்கிறது என்றும், ஒருவேளை தேர்தலில் இப்போதைய எதிர்க்கட்சி வெற்றி பெரும் பட்சத்தில், அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் திறத்துறையினரை தங்கள் வசப்படுத்தி மட்டுமே வைத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், விஜய் ரசிகர் மன்றம் சார்பாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், கடந்த 1991 ஆம் வருடம் முதல் 2016 ஆம் வருடம் வரை சட்டமன்ற தேர்தலில் இருபெரும் தலைவர்களை தமிழகம் கண்டிருந்தாலும், இப்போதைய வெற்றிடத்தை நிரப்ப இளம் தலைவர் நீங்கள் நாளைய முதல்வராக வர வேண்டும் என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்டுள்ளது. இந்த அரசியல் போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay Fans Create Poster about Vijay Political Decision


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal