மாணவர்களே ரெடியா? தேதி குறித்த நடிகர் விஜய்! மீண்டும் தயாராகும் பிரமாண்டம்!  - Seithipunal
Seithipunal


பல ஆண்டுகளாக அரசியலில் நடிகர் விஜய் களம் இறங்குவார் என்று சொல்லப்பட்ட நிலையில், இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.

கட்சி தொடங்கியதும் வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிடுவதே இலக்கு என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு முழுநேர அரசியலில் களமிறங்குவார் என்றும், நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முன்னதாக கடந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைரஸ் வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய், பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தமிழகம் முழுவதும் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் உடன் ஊக்க தொகையும் அளித்தார். 

இதற்காக ஒரு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. வந்திருந்த அனைத்து மாணவர்களுக்கும் அருமையான உணவு வழங்கிய நடிகர் விஜய், மாணவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அவர்களுடன் உரையாற்றினார். 

இந்த விழா தமிழகம் முழுவதுமே நல்ல வரவேற்பையும், நடிகர் விஜய்க்கு நல்ல மரியாதையையும் கொடுத்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவுக்கான நாள் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதன்படி வருகின்ற ஜூன் 28 ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டங்களாக இந்த விழா நடைபெற உள்ளதாகவும்,  இந்த விழாவில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actior Vijay Tamilaga Vetri Kazhagam SchoolStudents rewards


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->