சேலத்தில் அதிரடி...! கடன் வசூலிக்கச் சென்ற வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல்...! - 2 பேர் அதிரடி கைது...!
Action Salem series attacks youths who went collect loans 2 people arrested action
சேலம் தென் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த விஜய் (30), தனியார் வங்கி சார்பில் கடன் வசூல் முகவராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு, தனது நண்பர் கார்த்தி (26) உடன், சூரமங்கலம் சோளம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (24) என்பவரின் வீட்டிற்கு மாதத் தவணைத் தொகையை வசூலிப்பதற்காக சென்றிருந்தார்.

மொபட் வாங்கியதற்காக பெற்றிருந்த கடனின் தவணை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, விஜய்க்கும் தனலட்சுமிக்கும் இடையே திடீரென கருத்து மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், தனலட்சுமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி உரக்கக் குரல் எழுப்பியதாகவும், அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு கணவர் சவுந்திரராஜன், மாமனார் குப்பன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அங்கு ஏற்பட்ட பரபரப்பான சூழலில் இருதரப்பினருக்கும் இடையே கடும் கைகலப்பு வெடித்தது. இதில் விஜய் மற்றும் கார்த்தி காயமடைந்தனர்.
அவர்களை மீட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் விஜய், கார்த்தி, சவுந்திரராஜன், குப்பன், திவன்ராஜ் (25) உள்ளிட்ட 6 பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சவுந்திரராஜன் மற்றும் திவன்ராஜ் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Action Salem series attacks youths who went collect loans 2 people arrested action