மக்களுக்கு பேரிடி! ஆவின் வெண்ணெய், நெய் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களால் ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் வெண்ணை, நெய், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களால் நடுத்தர மக்கள் அதிக அளவில் பயன்பெறுகின்றனர்.

கடந்த சில மாதங்களாகவே பால் பொருட்களின் விலை தொடர்ந்து விலை உயர்வை கண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வரலாறு காணாத வகையில் ஆவின் நெய் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஆவின் நெய் 200 மில்லி ₹145 லிருந்து ₹160 ஆகவும், 100 மில்லி ₹70 லிருந்து ₹80 ஆகவும், 500 மில்லி ₹315 லிருந்து ₹365 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 15 லிட்டர் ஒரு டின் நெய் ₹10,725 லிருந்து ₹11,885 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று வெண்ணெய் 100 கிராம் ₹55 லிருந்து ₹60 ஆகவும், 500 கிராம் ₹260 லிருந்து ₹275 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நெஞ்சில் பேரிடியாக விழுந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin Ghee price increased by Rs 100 per kg


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->