வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு : நாள் குறித்த தேர்தல் அதிகாரி.! - Seithipunal
Seithipunal


வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கு தேர்தல் கமிஷன் ஆணையம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. வரும் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும். 

மேலும், வருகின்ற 2023 மார்ச் 31-ம் தேதிக்குள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 100 சதவீதம் விபரங்களை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது,

"பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் வாக்காளரின் ஆதார் விபரங்களை இணைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம் நடத்தியும் விபரங்கள் இணைக்கப்படும். ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு வீடாக சென்று விபரங்களை சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். 

முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து, வாக்காளரின் ஆதார் விவரங்களை இணைக்கும் திட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவுட்டுள்ளது". என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aadhaar Linking with Electoral Roll Dated Election Officer


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->