மது போதையில் வந்த ரசிகர்கள்! தனியறையில் அடித்து கவனித்த திரையரங்க ஊழியர்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் திரையரங்க  ஊழியர்கள் மற்றும் திரைப்படம் பார்க்க வந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல்  அங்கு பதற்றத்தை உருவாக்கியது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை இருதரப்பிலும் விசாரணை நடத்தி வருகிறது.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் அமைந்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கில் திரைப்படம் காண்பதற்காக ஏராளமான சினிமா ரசிகர்கள் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு முக்கியமான திரைப்படங்கள் வெளியாகியதால்  திரையரங்குகளில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில் படம் பார்க்க சென்ற சில இளைஞர்கள் மது போதையில் சென்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திரையரங்க ஊழியர்கள் அந்த இளைஞர்களுக்கு அனுமதி மறுத்தனர். இது காரணமாக இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் திரையரங்கு ஊழியர்கள் அந்த இளைஞர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மோதல் தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  இருதரப்பிடியையும் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a tussle between theatre employees and youths creates tenson at tirupur multiplex


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->