கழிவறையில் உணவை வைத்து சாப்பிடும் முதியவர்.! கண்ணீர் வரவழைக்கும் பின்னணி.!  - Seithipunal
Seithipunal


வீட்டிற்கு கதவு இல்லாத காரணத்தால், சமைத்த உணவை கழிவறையில் வைத்து பாதுகாத்து சாப்பிட்டு வருகின்றார் முதியவர் ஒருவர். இவரைப்போன்று ஏழ்மையில் இருக்கின்றவர்களை அடையாளம் கண்டு அரசு உதவ வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

ஸ்ரீபெரும்புதூர் கண்டிவாக்கம் பகுதியில் வசிக்கும் குப்பன். இவருக்கு வயது அறுபது. மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு சில உடல்நல குறைகள் காரணமாக அறுவைசிகிச்சை செய்யசெய்யப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாது. முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. குடிசையில் வசிக்கும் இவர் வறுமையின் காரணமாக வீட்டிற்கு கதவு போட இயலவில்லை. 

ஆகவே உணவை வீட்டில் வைத்தால் நாய் உள்ளிட்ட பிராணிகள் உணவை சாப்பிட்டு சென்றுவிடுவதால், சமைத்த உணவை அரசு கட்டிக்கொடுத்த கழிவறையில் வைத்து பாதுகாத்து சாப்பிடுகிறார். இவருக்கு அரசின் உதவி எதுவும் கிடைக்கவில்லை எனவும், அரசு வறுமை ஒழிப்பிற்க்காக ஒதுக்கும் நிதியை இவர்போன்ற உண்மையான ஏழைகளுக்கு செலவிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். 

இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் வட்டாச்சியர் திவ்யஸ்ரீயிடம் கேட்டபோது அவர் முதியோர் உதவித் தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு அறுபது வயது மூடிய இன்னும் நான்கு மாதம் உள்ளது. அதன்பின் தான் அவருக்கு அதனை வழங்க முடியும். அவருக்கு உணவு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வீட்டிற்கு கதவு பொருத்துவதற்கு வட்டாட்சியரிடம் வீட்டின் நிலைகுறித்து விசாரணை அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன்' என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A men protect his food in bathroom 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->