இருசக்கர வாகனம் கழுவுவதில் தகராற்றால் பறிபோன உயிர்., தூத்துகுடியில் நடந்த பயங்கரம்..!! - Seithipunal
Seithipunal


முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டி கொல்லபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடியை சேர்ந்தவர் ஆவுடையப்பன். ஆவுடையப்பனின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் சுப்பையா என்பவர் அவரது  இரு சக்கர வாகனத்தை ஆவுடையப்பனின் வீட்டு வாசலில் வைத்து கழுவியுள்ளார்.

வீட்டு வாசலில் தண்ணீர் தேங்கி இருந்ததால் ஆவுடையப்பன் சுப்பையாவிடம் வாக்குவத்தில் ஈடுப்பட்டார். இதனால் சுப்பையா மிகவும் ஆத்திரமடைந்தார். இந்நிலையில் ஆவுடையப்பனை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

அதன்படி, சம்பவதன்று இரவு ஆவுடையப்பனை சுப்பையா மற்றும் அவருடன் வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.இதானால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அப்போது அங்கு வந்த ஆவுடையப்பனின் மகனையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆவுடையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறை தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வண்டி கழுவும் போது ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man murder near thooththukudi


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal