சுருண்டு கிடக்கும் தாயை கண்டு கதறிய அழும் குழந்தை! கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்கள் சுமார் 4000 மேற்பட்டோர் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறையில் டிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஊடகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களுடன் நேற்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அது தோல்வியில் முடிவடைந்ததால் மூன்றாவது நாளாக இன்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற பொது தேர்தலின் போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பல ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் தனது கைக்குழந்தையுடன் கலந்து கொண்ட ஒரு ஆசிரியையும் உடல்நலன் பாதிக்கப்பட்டு போராட்டக் களத்திலேயே சுருண்டு படுத்துள்ளார்.

தன் தாய் உடல்நலன் பாதிக்கப்பட்டு சுருண்டு படுத்து கிடப்பதைக் கண்ட கைக்குழந்தை அவரை அம்மா..! அம்மா..! என்றழைத்து எழுப்பும் காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A crying child wake up his mother in hunger strike video viral


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->