திண்டுக்கல்.! சரக்கு வாகனம் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து சரக்கு வாகனம் விபத்துக்குள்ளானது.

கரூர் மாவட்டத்தை தேர்ந்த விஜய் என்பவர் நர்சரி தோட்டம் வைத்துள்ளார். இவரது தோட்டத்திற்கு ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் இருந்து சரக்கு வாகனம் ஒன்று கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது வேடசந்தூர் அருகே திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், வேகமாக சென்று அங்கிருந்த 10 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A cargo vehicle overturned in a ten foot ditch


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->