சென்னையில் சிக்கிய 9 கிலோ தங்கம்.! தேர்தல் பறக்கும் படைக்கு ஷாக்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை தியாகராய நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ தங்கம் சிக்கியுள்ளது.

சென்னை தியாகராய நகரில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொரியர் நிறுவன காரை மடக்கி சோதனை செய்ததில் சுமார் 6 கிலோ தங்கம் மற்றும் 2.7 கிலோ வெள்ளியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மூன்று வாகனங்களில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அதேபோன்று கரூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருவாய் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9kg gold seized by Election commission officers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->