சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் பேரணி .!  - Seithipunal
Seithipunal


நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய  தொழிற்படை போலீசார்கள் பழவந்தாங்கல் முதல்  சென்னை விமான நிலையம் வரை  மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

 சென்னை  மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிற்படை போலீசார்,  100மோட்டார் சைக்கிள்களில்  தேசியக் கொடியை பிடித்தபடி பேரணியாக சென்றனர்.

இப்பேரணியை விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார், மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள் . பழவந்தாங்கல் மத்திய தொழிற்படை குடியிருப்பில் இருந்து தொடங்கிய இப்பேரணி ஜி.எஸ்.டி. சாலை வழியாக மீனம்பாக்கம், திரிசூலம் சென்று விமான நிலையம் சென்றடைந்தது. 

பின்னர் பன்னாட்டு முனையம், உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் சுற்றி விட்டு மீண்டும் பழவந்தாங்கலை வந்தடைந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 indepennts day Awareness


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->