7 வயது சிறுமி., 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது.! கொள்ளிடத்தில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டம் அருகே கொள்ளிடத்தில் 4 சிறுவர்கள் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நான்கு சிறுவர்களில் ஒருவன் பத்து வயதே ஆனவன் என்பது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 10 வயது முதல் 15 வயது வரை உள்ள நான்கு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த நான்கு சிறுவர்களும் அந்த ஏழு வயது சிறுமியை ஒரு வீட்டின் பின்புறம் அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தனது பெற்றோரிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நான்கு சிறுவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும், அந்த சிறுமியை சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 years old child abused


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..
Seithipunal