#Breaking: 7 பேரின் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரை  விடுதலை செய்யக்கோரி தமிழகமே போராடி வந்தது. முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை பெற்று வருகின்றனர் . 

சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுக, பாமக, திமுக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகளும் 7 போ் விடுதலையை தங்கள் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசின் அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி செய்து தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இந்த வழக்கு உள்ளதால் விடுதலை குறித்து அவரே முடிவு எடுப்பார் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 tamils release case in supreme court judgement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->