ஆபாசப் படம் பார்த்த 65 பேருக்கு ஏற்பட்ட சிக்கல்..! வெளியான புதிய தகவல்..!
65 people list ready for porn videos
ஆபாசப் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தும், பதிவிறக்கம் செய்த 65 பேர் கொண்ட பட்டியலைச் சென்னை மற்றும் மேற்கு மண்டலக் காவல்துறைக்கு அனுப்பி வைத்திருப்பதாக, ஏடிஜிபி ரவி தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்தில், ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து அதை மற்றவர்களுக்கு அனுப்புவர்களின் பட்டியலைக் கொண்டு, காவல்துறை அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 2 பேரைக் கைது செய்த காவல்துறை, தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆபாசப் படங்களை பகிர்ந்தது மற்றும் பதிவிறக்கம் செய்தவர்கள் 40 பேர் அடங்கிய பட்டியலைச் சென்னை மாநகரக் காவல்துறைக்கும், 25 பேர் அடங்கிய பட்டியலை மேற்கு மண்டலக் காவல்துறைக்கும் அனுப்பி வைத்திருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்திருக்கிறார்.
English Summary
65 people list ready for porn videos