தமிழ்நாடு, புதுச்சேரியில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டுதோறும் தடை விதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் இந்தாண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் தமிழம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் அமலில் இருக்கும். அதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்பி படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும், இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தடையை மீறி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 6  ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

61 day fishing ban came into Puducherry and Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->