அன்புஜோதி ஆசிரமத்தில் சிக்கிய 600 கிலோ ரேஷன் அரிசி... அரசு அதிகாரிகள் விசாரணை தீவிரம்..!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் அன்புஜோதி அறக்கட்டளை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணையானது வேகமெடுத்துள்ள நிலையில் அன்புஜோதி ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 600 கிலோ ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அன்புஜோதி ஆசிரமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டோர் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கவேலுவை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தனர். அவரிடம் அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அன்புஜோதி ஆசிரமம் குறித்து முதலில் புகார் தெரிவித்த முக்கிய நபர் என்பதால் அவரை நேரில் ஆஜராகம்படி உத்தரவிட்ட சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோன்று குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது ஆசிரமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மூட்டை மூட்டையாக பதிக்க வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசிகள் பொதுமக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதா..? அல்லது ரேஷன் அரிசி கடத்தல் விற்பனை செய்பவர்களிடம் இருந்து பெறப்பட்டதா..? என்பது குறித்த அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

600 kg of ration rice seized in AnbuJyoti Ashram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->