கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி! சுற்றி வளைத்த போலீசார்!  - Seithipunal
Seithipunal


கேரளாவிற்கு தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் போன்றவை கடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதனால் சோதனை சாவடிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் களியக்காவிளை போலீசார் இன்று படந்தாலு மூடு சோதனை சாவடியில் தீவிர வாகன சாதனையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கூண்டு கட்டிய மினி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. 

போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்வதற்காக நிறுத்தியபோது வாகனத்தின் ஓட்டுனர் தப்பி ஓட நினைத்தார். இதனை சுதாகரித்துக் கொண்ட போலீசார் ஓட்டுநரை வளைத்து பிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். 

இதில் அவர் பாற சாலை பகுதியைச் சேர்ந்த அனில் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மினி லாரியை சோதனை செய்த போது அதில் சுமார் 5 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்த விசாரணையில் கேரளாவிற்கு பணங்குடியில் இருந்து கடத்திச் செல்வது தெரிய வந்தது. பின்னர் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் வாகன ஓட்டுனரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். 

மேலும் போலீசார் பறிமுதல் செய்த அரிசியை அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் மற்றும் மினி லாரியை தாலுக்கா அலுவலகத்திலும் போலீசார் ஒப்படைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 tons of ration rice smuggle police surrounded


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->