2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.! 40 வயது நபருக்கு 14 ஆண்டுகள் சிறை.!
40 year old man jailed for 14 years for sexually harassing 2 girls in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது நபருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (40). இவர் 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு சுப்ரமணியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இது தொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சுப்பிரமணியனுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து சுப்ரமணியன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
40 year old man jailed for 14 years for sexually harassing 2 girls in Ariyalur