தமிழகத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் மாவட்டம்.. 4 நாட்களில் தலைகீழாக மாறிய நிலைமை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த 4 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழையும், பிற மாவட்டங்கள் பரவலாக மழை பெய்து வருகிறது. 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருவதால், பல கிராமங்களில் மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதி மற்றும் விவசாய நிலங்களில் தண்ணீரில் மூழ்கி உள்ளது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், பல சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கூடலூர் புறமணவயல் பழங்குடியினர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவு போல் காட்சியளிக்கிறது. முதுமலை - பந்திப்பூர் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. பலத்த மழை மற்றும் காற்றின் காரணமாக உதகை நகரின் தீயணைப்பு நிலைய வளாகம், பாடகி இல்லம் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளது. இதனால் உதகை நகரில் திங்கட்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் பலத்த காற்றால் நகரின் பெரும்பாலான பகுதிகள் மக்கள் இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறியவை, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, வருகிற எட்டாம் தேதி வரை மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, வீடுகள் இடிந்து விழுதல், மரம் விழுதல் ஆகியவற்றை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை நீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்குள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை ஐந்து பாதுகாப்பு முகாம்களில் சுமார் 500 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மாவட்டத்தில் 283 இடங்கள் மழை நீரால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதுவரை ஒரு இடத்தில் மட்டும் வீடு முழுமையாக இடிந்துள்ளது.  இரண்டு இடங்களில் சுவர்கள் மட்டும் இடிந்துள்ளது. பாதுகாப்பு பணிகளில் 40 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் ஈடுபட்டுவருகின்றனர். தேசிய பேரிடர் குழுக்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 days heavy rain in nilgiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->