தனியார் வசமாகும் அரசு ஓட்டுநர் நியமனம்.. 400 ஓட்டுனர்களை நியமிக்க 4 நிறுவனங்கள் போட்டி..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு வழிதடத்தில் 400 ஓட்டுனர்களை நியமிப்பதற்கான டெண்டரில் 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் பொழுது பொதுமக்கள் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த சூழ்நிலையை சமாளிக்க அரசு தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கியது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் சென்னை மாநகர பேருந்துகளை தனியார் பங்களிப்புடன் இயக்குவது குறித்தான ஆய்வினை மேற்கொள்ளும் குழு அமைப்பதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

அதன் பின்னர் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொள்ள மட்டுமே ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் அரசு ஊழியர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு துறையில் காலியாக உள்ள 400 ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமனம் செய்ய 4 நிறுவனங்கள் டென்டரில் பங்கேற்றுள்ளன. சென்னை, கும்பகோணம் போன்ற பல வழித்தடங்களில் நியமிக்க தேர்வு செய்யப்படுபவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 companies participate in the tender to govt bus driver appointment


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->