337 கிலோ கஞ்சா அழிப்பு! 7 வருடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா... இதன் மதிப்பு தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த 2019-ம் ஆண்டு முதல் 337 கிலோ கஞ்சா, திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.1கோடிஆகும்.மேலும், சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி, திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்திலுள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.

இதில் திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகர காவல் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் லோகநாதன், செந்தில்ராஜா, கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

337 kg of cannabis destroyed Cannabis seized for 7 years Do you know its value


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->