அரியலூரில் அரளி விதையை அரைத்து குடித்து பெண் தற்கொலை.! 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் பெண் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டம் நமங்குணம் காலனி பகுதியை சேர்ந்தவர் கரும்பாயிரம்(49). இவர் அப்பகுதியில் டேங்க் ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (40). இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பாப்பாத்தி (36) என்பவர் கருப்பாயிரத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இதைப் பார்த்த தமிழ்ச்செல்வி, பாப்பாத்தியிடம் ஏன் என் கணவருடன் பழகிராய் என்று கேட்டு தாக்கியுள்ளார். இதனால் வேதனை அடைந்த பாப்பாத்தி தற்கொலை செய்து கொள்வதற்காக அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பாப்பாத்தியை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் பாப்பாத்தி பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து கரும்பாயிரம், அவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் உறவினர் பழனியம்மாள் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 person arrested for woman suicide in Ariyalur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->