குளிக்க சென்ற 3 சிறுமிகளுக்கு நேர்ந்த பெரும் விபரீதம்! துயரத்தில் கதறும் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் பகுதியில் வசித்து வருபவர்கள் சண்முகம்,ஏழுமலை மற்றும் மணி. மேலும் சண்முகம் மகள் பவதாரணி 6 ஆம் வகுப்பும் , ஏழுமலை மகள் கவுசல்யா 7 ஆம் வகுப்பும், மணி மகள் மணிமொழி 9-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுமிகள் மூன்று பேரும் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள  விவசாய கிணற்றுக்கு குளிக்கசென்றுள்ளனர். இவர்களுடன் மணிமொழியின் தங்கையான 6-ம் வகுப்பு படித்து வரும் நித்யாவும் சென்றுள்ளார்.

அப்பொழுது அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி படிக்கட்டில் அமர்ந்தவாறு தங்களது துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். மேலும்   நித்யா மட்டும் கிணற்றுக்குள் இறங்காமல் மேலே நின்று பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது சிறுமி பவதாரணி திடீரென கால்தவறி தண்ணீருக்குள் விழுந்துள்ளார். இதை பார்த்து பதறிப்போன மணிமொழி, கவுசல்யா ஆகிய இருவரும் பவதாரணியை காப்பாற்ற வேண்டும் என சிறிதும் யோசிக்காமல் தண்ணீருக்குள் குதித்துள்ளனர்.  நீச்சல் தெரியாததால்  அவர்கள் மூன்று பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நித்யா, உடனே விரைந்து சென்று இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே கிணற்று பகுதிக்கு விரைந்த கிராமமக்கள் தண்ணீரில் மூழ்கிய 3 மாணவிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் மூன்று பேரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிகள் ஏற்கனவே  இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

English Summary

3 childern dead by falling inside well


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal