தொடர்ந்து 2வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று 2வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து, ரூ.4,805 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதோபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 60 பைசா குறைந்து, ரூ.60.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.600 குறைந்து ரூ.60,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

27.08.2022 gold Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->