#BREAKING || சென்னையில் அமித்ஷாவை சந்திக்கும் 24 பிரபலங்கள்..!! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை அடுத்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரில் இருந்து இறங்கி பாஜக தொண்டர்களை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் இன்று இரவு தங்கும் அவர் நாளை மாலை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெற உள்ள பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவை 24 பிரபலங்கள் சந்திக்க உள்ளனர். அவர்களில் பத்மஸ்ரீ விருது பெற்ற அனிதா பால்துரை, அபோலோ மருத்துவமனை சார்பாக பிரீத்தா ரெட்டி விஜயகுமார் ரெட்டி ஆகியோர் சந்திக்க உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து எம்ஜிஆர் பல்கலைக்கழக நிறுவனரும் புதிய நீதி கட்சி தலைவருமான ஏ.சி சண்முகம், நல்லி குப்புசாமி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து மற்றும் அவருடைய மகன் ரவி பச்சமுத்து, ஆற்காடு நவாப்புகள் முகமது அப்துல் அலி, முகமது ஆசிப் அலி ஆகியோர் சந்திக்கின்றனர்.

மேலும் செட்டிநாடு சிமெண்ட் முத்தையா, இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மற்றும் பி.எஸ் ராஜன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன், விளையாட்டு வீரர் பாஸ்கரன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், வின் டிவி நிறுவனர் தேவானந்தன், டேப்லெட் இந்தியா ஜெய் கிருஷ்ணன் ஜாவிர், சந்தானகிருஷ்ணன், இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.கே செல்வமணி, திரைப்பட இயக்குனர் ஏ.ஆர் ராஜசேகரன், வேல்ஸ் யுனிவர்சிட்டி ஐரிஸ் கணேஷ், தாஜ் குரூப் பிரமோத் ராஜன், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், அப்போலோ பல் மருத்துவர் ஜி.எஸ்.கே வேலு ஆகியோர் அமித் ஷாவை சந்திக்க உள்ளனர். மேலும் திரைப்பட நடிகர் விஷால் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 celebrities to meet Amit Shah in Chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->