#BREAKING || எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது...! - Seithipunal
Seithipunal


எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் தமிழக மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்பாக நேற்று முன்தினம், நெடுந்தீவு அருகே உள்ள பாறை பகுதியில் எஞ்சின் கோளாறால் நடுக்கடலில் சிக்கிய 9 ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணையில் படகு பழுதாகியாது தெரியவந்தது. இதையடுத்து 9 மீனவர்களையும் படகுடன் இலங்கை கடற்படை விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 Tamil Nadu fishermen arrested Sri Lankan Navy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->