ஒரேயடியாக குறைந்த தங்கத்தின் விலை.. ரூ.36,000 கீழ் குறைந்ததா இல்லையா.? .. இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தின் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பி வருகின்றனர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாகவே தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் நிலவி வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை 2வது நாளாக குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,680க்கும், சவரன், ரூ.37,440க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.46 குறைந்து ரூ.4,626க்கும், சவரனுக்கு ரூ.368 குறைந்து, ரூ.37,008க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து, ரூ.61.60ஆகவும், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.61,600 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

16.09.2022 gold Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->