இன்ஸ்டாகிராம் காதலனால் 11ம் வகுப்பு மாணவிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


+1 மாணவியை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இன்ஸ்டாகிராம் காதலனை காவல்டுறையினர் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வேலூர் மாவட்டம், விருஞ்சிபுரம் கிராமம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்நிலையில், அந்த மாணவியை அழைத்த கோகுல் தனக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறி அவரை திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலுக்கு வர கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த மாணவியும் அங்கு சென்றார்.

அப்போது, அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். இது குறித்து மாணவி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் கோகுலை கண்டித்துள்ளார்.

அப்போது வீடியோவை வெளியிடாமல் இருக்க 10 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.  இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கோகுலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th student threatened to take pornographic video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->